Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (11:11 IST)
அதிமுக அரசில் முக்கியமான ஒரு அமைச்சராக வலம் வருபவர் செங்கோட்டையன். ஆனால் அவர் திமுகவுடன் மறைமுகமாக உறவு வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.


 

 
எடப்பாடி அணியில் இருந்து விலகி தற்போது தினகரன் அணியில் இருப்பவர் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம். இந்த ஆட்சியில் தனது கோரிக்கைகள் நிறைவேறாதது பற்றி நேற்று தனது சொந்த ஊரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய ஒரு கருத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செங்கோட்டையனிடம் எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று முகத்திற்கு நேராக கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இதனையடுத்து அவர்கள் இருவரும் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து திமுகவுடன் செங்கோட்டையன் மறைமுக உறவு வைத்துள்ளது தெளிவாகிறது. கட்சிக்கு துரோகம் இழைத்து ரகசிய உடன்படிக்கை செய்ய முயன்ற செங்கோட்டையனின் முயற்சி முடியாமல் போயுள்ளது.
 
செங்கோட்டையன் தான் யோக்கியன் தான் என சட்டமன்றத்தில் பேசும்போது அவரது முகத்திரையை எதிர்க்கட்சித் தலைவர் கிழித்துவிட்டார். ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையனால் பதில் சொல்ல முடியவில்லை. மரியாதை, நாகரீகம் கருதி ஸ்டாலின், இரண்டு வார்த்தையோடு முடித்திருக்கிறார். ஆனால் செங்கோட்டையன் 25 முறை ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியது தெரியவருகிறது என தோப்பு வெங்கடாச்சலம் போட்டுடைத்திருக்கிறார்.

 

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments