அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டி! தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து நீக்கம்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (13:45 IST)
பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அதிமுக வாய்ப்பு தராத நிலையில் சுயேட்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் தோப்பு வெங்கடாசலம். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் கட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், கட்சியின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் தோப்பு வெங்கடாசலத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாகவும் இபிஎஸ்- ஒபிஎஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments