Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’போராட்டம் ஒரு விதை’ - ஹிப் ஹாப் ஆதிக்கு இளைஞர்கள் பதிலடி!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (11:53 IST)
நாட்டில் நிலவும் பல்வேறு அவலங்களைப் போக்கும் முயற்சிக்கான விதைதான் எங்களது போராட்டம் என்று ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.


 

நேற்று இரவு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஆதி, “ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

ஹிப் ஹாப் ஆதிக்கு பதிலடி கொடுத்த, ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்கள், ”தாங்கள் போராட்டக் களத்தை விட்டு வெளியேறியதற்கு காரணமாக, நமது பிரதமர் அவர்களை நாங்கள் வசை பாடுவதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்பது எங்கள் போராட்டத்திற்கான ஒரு கருவி மட்டுமே என்பது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?

நாட்டில் நிலவும் பல்வேறு அவலங்களைப் போக்கும் முயற்சிக்கான விதைதான் எங்களது போராட்டம். அரசியல் சார்ந்த அனத்து அவலங்களையும் நாங்கள் வெளிக்காட்டியே தீரவேண்டும் என்பதுவே எங்களது முழு நோக்கம்.

இந்தப் போராட்டத்தின் மூலம் நாங்கள் அரசுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறோம்.  எங்கள் போராட்டத்தின் மூலம் பல்வேறு உறுதி மொழிகளை மக்களை மனமேற்க வைத்துள்ளோம்.

பிரதமரை வசைபாடியதுதான் தங்களுக்கு வருத்தமென்றால், தாங்கள் களத்தைவிட்டு வெளியேறியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அவர் பிரதமராக இல்லாமல் கைதேர்ந்த அரசியல்வாதியாக இருப்பது உங்களுக்கு ஏன் புரியாமல் போனது.

கடும் வறட்சி என்பது கண்கூடாகத் தெரிந்தும் தனது அரசியல் புலமையை, போராட வக்கில்லாத நம் விவசாயியிடம் காண்பித்துக் கொண்டிருப்பவரை கட்டியணைத்து முத்தமிடச் சொல்கின்றீர்களா?  

தனி நாடு என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவ்வாறு எங்களிடையே சிலர் சொல்வது எங்கள் உணர்வின் உச்சம் என்பதும் தங்களுக்கு விருப்பமான அந்த கைதேர்ந்த அரசியல்வாதியின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஏனோ?

இறுதியாக... உங்களுடனான தெளிவில்லாத துவக்கத்தை, மிகத் தெளிவாக நாங்கள் தொடர்கிறோம்.  நன்றி. போராட்டக் களத்திலிருந்து ஒரு தமிழன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments