Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் இயங்க கட்டுப்பாடு. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. 
 
ஆம், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் டாஸ்மாக் மது கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments