Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் இப்படி நடக்குமா? - திருமாவளவன் சந்தேகம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (19:26 IST)
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய தொல்.திருமாவளவன், “அதில், “இந்தியா முழுவதும் ஏழை, எளிய மக்களால் போற்றப்படும் அம்பேத்கருக்கு ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப்பாடி நெடுஞ்சேரியில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைகளுக்கு நான் சென்று மாலை அணிவித்தது சட்ட விரோதம் என என் மீதும், எனது தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு தொடரப்பட்டது.
 
இதில் நாங்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வந்துள்ளது. இதற்காக நீதித்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் சேர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வருகிற 30–ஆம் தேதிக்குள் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும்.
 
ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இருப்பினும், மக்கள் நலக்கூட்டணி ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிடும். வருகிற 1, 2, மற்றும் 3–ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments