Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விசிக போட்டி: திருமாவளவன் அறிவிப்பு..!

Siva
புதன், 6 நவம்பர் 2024 (15:35 IST)
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே அண்டை மாநிலங்களில் உள்ள தேர்தல்களில் கூட போட்டியிடுவதில் தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வட இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநில தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஆறு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் பேசிய போது, “எங்கள் கட்சி மும்பையில் போட்டியிடத் திட்டமிட்டது. ஆனால் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த தொகுதிகளில் போட்டியிடவில்லை.

எங்கள் கட்சியை சேர்ந்த ஆறு பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் மிகவும் செல்வாக்கு இருப்பதை பார்த்து  மராத்திய தலித் அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. ஆறு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் நிலையில், மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments