Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் முடிகளை பறித்த முடிகொள்ளையன் கைது

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (21:50 IST)
செயின் திருடன், வழிப்பறி திருடன், பணத்திருடன் லிஸ்ட்டில் தலை முடியை கூட விட்டு வைக்க வில்லை. கோயிலுக்கு செல்லும் பெண்களின் முடிகளை பறித்த முடிகொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

 

கரூர் நகரில் உள்ள வழுக்குப்பாறை பகுதியை சார்ந்தவர் ஆம்ப்ரூஸ் (வயது 33),. இவர் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் ஆங்காங்கே கரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமிகும்பிட செல்லும் பெண்களிடம், பெண்கள் சாமிகும்பிடும் போது அவர்களின் தலை முடியை கத்திரிக்கோலால் அறுத்து நூதன முறையில் விற்று வந்துள்ளார்.

ரூ 250 முதல் 300 வரை விற்று வந்த இளைஞர் ஆம்ப்ரூஸ் ஏற்கனவே 2003, 2005 ஆகிய ஆண்டுகள் இதே புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க நிலையில், தற்போது இன்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண்களிடம் நைசாக அவர்களுக்கே தெரியாதவாறு, கத்திரிக்கோலால் முடியை அறுக்க முயன்றுள்ளார்.

இதை அறிந்த பெண்கள் அங்குள்ளவர்களிடம் திடீர் கூச்சலிட்டு, கத்தியதால் அங்கு திரண்ட பக்தர்கள் அந்த வாலிபரை கையும், களவுமாக கரூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கரூர் நகர காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆங்காங்கே ஹெல்மெட் திருடன், செயின் திருடன், வழிப்பறி திருடன், ரயில் திருடன் என்று பணம் மற்றும் நகைகள் மட்டுமில்லாமல் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து வரும் கொள்ளையர்கள் மத்தியில் பெண்களின் தலைமுடியை மட்டும் குறிவைத்து திருடிய இந்த நூதன திருடன் குறித்து காவல்துறையினர் பல்வேறு கண்ணோட்டத்தில் விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தஞ்சையில் பரபரப்பு..!

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments