Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"காங்கிரஸில் ஜி.கே.வாசனுக்கு இடமில்லை" - வெடிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

"காங்கிரஸில் ஜி.கே.வாசனுக்கு இடமில்லை" - வெடிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

, செவ்வாய், 14 ஜூன் 2016 (13:01 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியில், ஜி.கே. வாசனை மட்டும்  சேர்க்க மாட்டோம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக, தமாகா கூட்டணி வைத்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தனர். அதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் 83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
 
இந்த நிலையில், தமாக நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். கரூர் மாவட்ட தமாகா மேற்கு மாவட்ட இளைஞரணித் தலைவரும், கரூர் நகராட்சி 9 ஆவது வார்டு கவுன்சிலருமான ஸ்டீபன் பாபு தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவனில், 
தமிழக காங்கிரஸ் கமிடித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமானர்கள்.
 
அப்போது அவர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் யார் வேண்டும் என்றாலும் மீண்டும் தாய் கழகத்தில் இணையலாம். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க முயன்ற ஜி.கே.வாசனுக்கு மட்டும் இங்கு இடமில்லை என்றாராம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 6 பந்தய குதிரைகள் பலி