Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்கும் எனக்கும் எந்த ப்ரெண்ட்ஷிப்பும் இல்ல..! சர்ச்சைகள் குறித்து இர்பான் விளக்கம்!

Prasanth Karthick
வியாழன், 2 ஜனவரி 2025 (10:06 IST)

பிரபல யூட்யூபரான இர்ஃபான் தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என்றும், உதயநிதி ஸ்டாலினோடு பழக்கம் இல்லையென்றும் விளக்கம் அளித்துள்ளார்.

 

யூட்யூபில் இர்ஃபான் வியூஸ் என்ற உணவு சேனல் நடத்தி பிரபலமானவர் இர்ஃபான். இவரது சேனல் வீடியோக்களில் ப்ரொமோஷனுக்காக பல பிரபலங்களுடனும் வீடியோ செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது மனைவி பிரசவத்தின்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை பகிர்ந்ததால் சர்ச்சைக்கு உள்ளானார்.

 

ஆனால் அவர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர். மேலும் இர்ஃபானை கிண்டல் செய்து மீம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
 

ALSO READ: புத்தாண்டு முதல் பங்குச்சந்தைக்கு நல்ல காலமா? இரண்டாம் நாளில் உயர்வு..!

 

நீண்ட காலம் கழித்து இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்து பேசியுள்ள இர்ஃபான், தனக்கு உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த பழக்கமும் இல்லையென்றும், ஒரு ப்ரொமோஷனுக்காகதான் அவருடன் வீடியோ செய்ததாகவும், அதற்காகவெல்லாம் அவர்கள் எப்படி ஆதரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

தனக்கு எந்தவித அரசியல் பின்புலமும் கிடையாது என்றும், தன் மீதான வழக்குகளை சட்டரீதியாகவே தான் கையாண்டு வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணங்களை இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

திருச்செந்தூரில் திடீரென கருப்பாக மாறிய கடல் நீர்: பக்தர்கள் அதிர்ச்சி..!

போபால் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுகள் கழித்து அகற்றப்படும் கழிவுகள்!

100 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டு 2024 தான்.. இன்னும் அதிகரிக்கும்! - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments