Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை-எடப்பாடி பழனிசாமி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (19:02 IST)
மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள் அவர்கள் வருவதால் என்ன பயன்? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த  நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமியை ஆதரித்து, இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ் நாடு வருகிறார்கள். அதனால் என்ன பயன்? மத்தியில் இருந்து வருபவர்கள் தமிழ் நாட்டிற்கு எதாவது திட்டங்களை கொடுத்தார்களா? ஏதேதோ பேசி மக்களை குழப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழ் நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே கிடையாது. ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை  பாஜகவால் நிறைவேற்ற முடியாது. இத்திட்டத்தை மாநில அரசுகளால்தான் நிறைவேற்ற முடியும். மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், மேகதாது விவகாரத்தில், தேர்தலுக்காக சட்டத்தை மதிக்காமல் பாஜக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments