Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்த காவெல்லாம் வாங்குதே.. அபசகுணமா இருக்கே! – கொள்ளையடிக்காமல் எஸ்கேப் ஆன திருடன்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:11 IST)
மயிலாடுதுறையில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையன் காயம்பட்டதால் திருடாமல் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மங்கைநல்லூரில் உள்ள நகைக்கடை ஒன்றை கொள்ளையடிக்க கொள்ளையன் ஒருவன் திட்டமிட்டுள்ளான். இதற்காக காத்திருந்து நள்ளிரவு நேரத்தில் வந்த கொள்ளையன், பக்கத்து கடையில் இருந்து மின்சாரத்தை எடுத்து கட்டிங் மெசின் மூலமாக நகைக்கடை ஷட்டரை அறுத்து உள்ளே நுழைய திட்டமிட்டுள்ளான்.

கட்டிங் மெஷினால் அறுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக மெஷின் கையில் பட்டு கொள்ளையனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணாடி குத்தி கொள்ளையனுக்கு கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்ட கொள்ளையன் தான் கொண்டு வந்த கட்டிங் மெஷினை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளான்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments