காதலி பேசாத ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞர்

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (14:22 IST)
பேருந்து நிலையத்தில் காதலி தன்னிடம் பேசாததால் பேருந்து கண்ணாடியை உடைத்தத இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று  ஒரு இளைஞர் தன் காதலியுடன் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த இளைஞர் அருகில் நின்றிருந்த  அரசுப் பேருந்தின் கண்ணாடியைக் கையால் உடைத்தார்.

இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. அந்த இளைஞரின் கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து, சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த இளைஞர், தான் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர்; தற்போது, ஒரு பாலிடெக்னிக்கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து, அப்போக்குவரத்துக் கழகம் புகாரளித்ததை அடுத்து, போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments