Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறுப்பு நிறமாக வந்த தண்ணீர் ! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (21:03 IST)
கோடை காலம் வந்ததே வந்தது, தமிழ்நாட்டில் தீராத வறட்சியை உண்டுபண்ணிவிட்டது. மக்களும் குடி தண்ணீருக்காக பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 
தற்போது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் நதியில்   தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரானது கோவையில் உள்ள பெருங் குளங்களில் வாய்க்கால்கள் மூலமாகச் சேகரிக்கப்படுகிறது.
 
இந்நிலையில்  கோவைப் பகுதிகளில் உள்ள புறநகர் பகுதிக்கு செல்லும் நொய்யல் நதி தண்ணீரில் சாக்கடை கழிவுநீரும், தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகளும் கலந்து கொண்டு வருகின்றன.இந்த தண்ணீரை கோவைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  நொய்யல் நதி நீரானது  தண்ணீர் பட்டணம்புதூரை கடந்து வந்தபோது, தீடீரென்று அது கறுப்பாக நிறம் மாறியது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பொதுமக்களுக்கு செல்லுல் நீரில் இந்த மாதிரி சாயகழிவு நீரும், தொழிற்சாலைகளும் கலந்தால். அதைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments