கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார் !

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (21:54 IST)
கோவை   நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று காலையில்  அங்கிருந்த ஒரு மாருதி ஆல்ட்டோ கார் வெடித்து சிதறியது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த  நிலையில்,  பொள்ளாச்சி பதிவு எண் கொண்ட அந்த கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர், உக்கடம் பகுதியில் பழைய துணிகள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததாகவும்,  இவரது வீடு மற்றும் உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments