காதலியின் தாய்க்குப் பயந்து மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் பலி!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (19:43 IST)

காதலியிடம் பேசுவதை  தாயார் பார்த்ததால், மாடியில் இருந்து கீழே குதித்து மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொல்லப்பட்டியில் மதிய சட்டக்கல்லூரி உள்ளது.

இந்தக் கல்லூரியில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற  மாணவர் படித்து வந்தார்.

இவருக்கும் கரூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண்ணுக்கும் இருவரும் கரூரில் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது. நேற்றிரவு சஞ்சய், ஹரிணியுடன் அவாது வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தனர்.

இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஹரிணியின் தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதைப் பார்த்த சஞ்சய், 50 அடி மாடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில்,தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments