அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்துள்ளது - விஜயபாஸ்கர்

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (22:36 IST)
அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்து இருக்கிறது. எந்த திட்டமாக இருந்தாலும் பெண்களை மையமாக கொண்டே செயல்படுத்தப்பட்டன என்று கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி திட்டம் மூலம் 1297 பயனாளிகளுக்கு திருமணத்திற்கு நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது.

வருவாய் துறையின் மூலம் 564 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் நலத்திட்டங்கள், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீட்டுமனை பட்டா பெறுவது கனவாகவே இருந்து வந்தது. அம்மாவின் ஆசியோடு அம்மாவால் போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு பட்டாக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா இல்லாத நிலை இருந்தது. அவற்றில் உள்ள சிக்கல்களை களைந்து அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் இன்று 604 பேருக்கு தனிப்பட்டா வழங்கப்படுகிறது. திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பெண் முதல்வராக இருந்ததால் தான், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 5 ஆண்டுகள் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி திட்டங்கள் மூலம் முழுமையாக வழங்கப்பட்டது. படிக்க கூடிய மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களை கொடுத்து வருகிறோம். இதனால் தேசிய அளவில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரநோ நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் வழங்கி, இலவசமாக அரிசி, பருப்புகள் வழங்கப்பட்டது.

கொரனோவை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலம் தமிழகம். முதல்வரின் சீரிய நடவடிக்கை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் முயற்சியால் அதில் சாத்தியமாகியது. பொதுமக்கள் சிரமப்படுவதாக கூறி குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அம்மாவின் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் 43000 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இன்னும் ஒரு வார காலத்தில் மனுக்களை பெற்று அவர்களுக்கும் தகுதியான நபர்களுக்கு உதவித் தொகை பெற்று கொடுக்கப்படும். அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்து இருக்கிறது. எந்த திட்டமாக இருந்தாலும் பெண்களை மையமாக கொண்டே இருக்க வேண்டும். அம்மா இல்லாத சூழ்நிலையிலும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு இன்னும் திட்டங்கள் வழங்க அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

அடுத்த கட்டுரையில்