இயல்பு நிலைக்கு திரும்பியது காவேரி மருத்துவமனை; தொண்டர்கள் கூட்டம் குறைந்தது

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (08:44 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தபோது எடுத்த புகைப்படத்தில் கருணாநிதி எந்தவித செயற்கை கருவிகளும் இன்றி சுவாசிப்பதும் கண்ணை திறந்து அவர் ராகுல்காந்தியை பார்த்ததும் உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் வயது முதுமை காரணமாக அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியிருந்தது
 
எனவே கருணாநிதி அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மனநிம்மதியுடன் வீடு திரும்ப தொடங்கிவிட்டனர். நேற்று இரவு தொண்டர்கள் கூட்டம் பெருமளவு குறைந்திருந்தது. இன்று காலை வழக்கம்போல் காவேரி மருத்துவமனை இயல்பு நிலைக்கு திரும்பியது மட்டுமின்றி பொது நோயாளிகளும் மருத்துவமனைக்கு செல்ல இன்று அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments