Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

Mahendran
திங்கள், 2 ஜூன் 2025 (10:19 IST)
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான இசை ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் ’நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது
 
நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. இளையராஜா  அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
 
தங்களின் #Symphony இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். 
 
நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments