’ என் ரத்தக் கண்ணீருக்கும், சாவுக்கும் காரணம் ஆசிரியர்’.. கடிதம் எழுதி வைத்து மாணவன் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (14:20 IST)
தன்னிடம் டியூசம் படிக்க வராதம் மாணவனுக்கு ஆசிரியர் தொல்லை கொடுத்ததால், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கம்னூரில்  வசித்து வரும் சிங்கம் - அமுதா ஆகிய தம்பதியரின் மகன் பாலாஜி. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு  படிக்கும் போது ரவி என்ற ஆசிரியரின் டியூசனுக்கு சென்று படித்து வந்தார். இந்நிலையில், அவர் பத்தாம் வகுப்பு வந்ததும் வேறு ஒரு ஆசிரியரின் டியூசனுக்கு சென்றுள்ளார்.
 
இதனால்,கோபம் கொண்ட ஆசிரியர் ரவி, எதாவது காரணத்தைச் சொல்லி, மாணவர் பாலாஜியை துன்புறுத்தியதாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து, அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் மாணவனுக்கு ஆறுதல் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்,கடந்த 6 ஆம் தேதி, ஆசிரியர் கோபத்துடன் ரவியைத் திட்டியதாக தெரிகிறது.  இதை யாரிடமும் கூறாத பாலாஜி,  தன் வீட்டுக்கு வந்ததும்  தோட்டத்துக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
அவர், இறப்பதற்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், ’ஆசிரியர் ரவியின் கொடுமை தாங்க முடியாமல்தான் இம்முடிவை எடுத்துள்ளேன். அவனுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும்’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மாணவரின் சடலத்தைப் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments