Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினர் என்னை நிர்வாணப்படுத்தி அடித்தனர் – பியூஷ் மனுஷ் பேட்டி

காவல்துறையினர் என்னை நிர்வாணப்படுத்தி அடித்தனர் – பியூஷ் மனுஷ் பேட்டி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (19:22 IST)
சேலம் மத்திய சிறையில் இருந்து 13 நாட்களுக்கு பின்னர் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சிறையில் காவலர்களால் தான் நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கப்பட்டதா கண்ணீருடன் பியூஸ் மனுஷ்  கூறியுள்ளார். 


 


சேலம் முள்ளுவாடி ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை நிலம் கையகப்படுத்திய பின்னர் தொடங்க வேண்டும் என்று கூறி பணிகளை தடுத்ததாக சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட 3 பேர் கடந்த 8ம் தேதி கைது  செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  
 
இதில், கைதான கார்த்தி, முத்துச் செல்வம் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மருத்துவ காரணங்கள் அடிப்படையில் பியூஸ் மனுஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் பியூஸ் மானுஷிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
 
இதைதொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில், அவர் கூறியதாவது “ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்கு தேவையான நிலத்தை மக்களிடம் எந்த அறிவிப்பில்லாமல் கையகப்படுத்துவதை தான் கேட்டேன், அதற்கு என்னை கைது செய்து விட்டார்கள். சிறையில் நான் தேசிய கொடியை எரித்ததாக பொய்யாக கூறி என்னை தனி அறையில் வைத்து நிர்வாணப்படுத்தி அடித்தனர். என்னை ஏன் அவர்கள் அடிக்க வேண்டும், நான் காவல்துறையினர் பற்றி எப்போதும் தவறாக பேசியதில்லை, பிறகு யாருக்காக அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினார்கள்?. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எத்தனையோ போராட்டங்கள் செய்திருக்கிறேன். சேலம் மக்களுக்காக என் உயிரையும் தர தயாராக இருக்கிறேன்.

புற்று நோய்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதுகு என்று சொன்ன பிறகும் காதில் வாங்காமல் சிறை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசர், செந்தில் குமார், உள்பட 30 காவல்துறையினர் கண்மூடித்தனமாக என்னை பூட்ஸ் காலால் உதைத்தனர், அறைந்தனர். சமூக வலைதளங்களில் சமூகத்தை பற்றி சற்று காட்டமாக பதிவு செய்வேனே தவிர, மற்றப்படி நான் யாரையும் தாக்கி பேசியது கிடையாது, அவ்வளவு அடித்து துன்புறுத்தியும் காவலர்களை நான் மரியாதையாக தான் பேசினேன். நான் கூறியது அனைத்தும் உண்மை. இதில், எதாவது தவறு இருந்தால் கூறுங்கள், நான் சேலத்தை விட்டே என் குடும்பத்துடன் வெறும் காலுடன் வெளியேறுகிறேன்.” என்று வேதனையுடன் கூறினார்.
 
மேலும், சிறைத்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தமக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் இனி நேரக் கூடாது எனவும் பியூஸ் மானுஷ், கண்ணீர் மல்க தெரிவித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்