Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ரவுடியை நீதிமன்றத்திலேயே தூக்கிய காவல்துறை".! என்கவுண்டரா என மனைவி சந்தேகம்.!!

Senthil Velan
வியாழன், 26 செப்டம்பர் 2024 (13:38 IST)
சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடி ஜான் என்பவரை, மற்றொரு வழக்கில் கிச்சிப் பாளையம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடிகள் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு வருவது, ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சேலம் நீதிமன்றத்தில்  ஆஜராக வந்த ரவுடி ஜான் என்பவரை, மற்றொரு வழக்கில் கிச்சிப் பாளையம் போலீசார் கைது செய்தனர். 

காவல்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் ரவுடி கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன் பிணையில் வந்த ரவுடி ஜான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். 


ALSO READ: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா.? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்.!!
 
மேலும் என்கவுண்டர் செய்ய காவல்துறையினர் தூக்கி செய்து இருக்கலாம் என அவரது மனைவி சந்தேகம் அடைந்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரவுடி ஜான், கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments