பர்தா அணிந்து திருடிய நபரைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி !

Webdunia
புதன், 15 மே 2019 (20:02 IST)
நாமக்கல் மணிக்கூண்டு அருகே ஒரு இண்டர்நெட் சென்டரை நடத்திவந்தவர் ராஜகோபால். கடந்த 13 ஆம் தேதி அன்று இவரது சென்டரில் ரு. 5 லட்சம் ரூபாயை வைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் அன்று  இரவில் இவரது சென்டருக்குள் நுழைந்த மர்ம நபர் அப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
 
இதுகுறித்து  நாமக்கல் போலிஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடிவந்தனர். 
 
அப்போது இன்டர்நெட் சென்டரில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அங்கு வேலை பார்த்து வந்த உதயா என்பவர் கருப்பு நிற பர்தா அணிந்து வந்து பணத்தை திருடிச் செல்வது தெரிந்தது.
 
பின்னர் உதயாவை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வேலை செய்த நபரே சென்டரில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

இந்தமுறை அதிக தொகுதி!.. காங்கிரஸ் போடும் ஸ்கெட்ச்!.. சமாளிக்குமா திமுக?!...

அடுத்த கட்டுரையில்
Show comments