Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் தேடிய தமிழர் இவர்தான்: வீட்டுங்க வாங்க என அழைப்பும் விடுத்தார்

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (12:24 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் நேற்று பதிவு செய்த ஒரு டுவிட்டில், ‘தான் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்தபோது ஒரு தமிழர் தனக்கு ஒரு முக்கியமான டிப்ஸ் கொடுத்ததாகவும் அது தனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவரை நான் சந்திக்க விரும்புவதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என்றும் அவர் கேட்டிருந்தார்
 
இந்த நிலையில் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று சச்சின் தேடி அந்த நபரை கண்டுபிடித்து அவருடன் பேட்டியும் எடுத்து விட்டது. அந்த பேட்டியில் அந்த நபர் கூறியதாவது ’நான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தது உண்மை தான் என்றும், அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி விட்டு அவரது அவரிடம் ஒரு கருத்தை சொல்லலாமா என்று அனுமதி கேட்டேன் என்றும் அதற்கு அவர் தாராளமாக சொல்லுங்கள் என்று கூறியவுடன் அவர் பயன்படுத்தி வரும் எல்போ கார்ட் குறித்து ஒரு டிப்ஸ் கூறியதாகவும் தெரிவித்தார் 
 
ஆனால் அடுத்த போட்டியிலேயே அவர் நான் கூறியதை ஏற்றுக்கொண்டு எல்போ கார்டை சரி செய்து கொண்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தகவலை தான் தன்னுடைய தாயார் மற்றும் நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரிடமும் கூறவில்லை என்று தெரிவித்த அவர் தற்போது அவர் டுவிட்டரில் இதனை தெரிவித்ததால் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்தார் 
 
மேலும் சச்சின் தன்னுடைய வீட்டுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர் தன்னுடைய குடும்பத்தினர் குழந்தைகள் மட்டும் தன்னுடைய தெருவில் உள்ளவர்கள் நண்பர்கள் அனைவரும் சச்சினை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் ரசிகரின் ஆசையை நிறைவேற்றுவார் என்று நம்புவோம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments