மொழிப்பாடம் தேர்வு தேதி மட்டும் தேதி மாற்றம்: மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:48 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்படும் அல்லது ஆன்லைனில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு ஒன்றை தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
பிளஸ் டூ தேர்வில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மொழிப் பாடம் தேர்வு மே 3ஆம் தேதிக்கு பதிலாக மே 31-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
மொழிப்பாடம் தவிர மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடக்கும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிளஸ்டூ தேர்வு நடத்துவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments