Webdunia - Bharat's app for daily news and videos

Install App

543 தொகுதிகளிலும் ஜெயிக்க பாஜக ’புது வியூகம்’

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (14:34 IST)
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்து கட்சிகளும் முனை காட்டிலும் பரபரப்பாக  பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். தமிழகத்திலும் கூட்டணி அமைத்து ,முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் ஜெயிக்க 100 % ஓட்டுப் பதிவு இருக்க வேண்டும் என பாஜக  தலைமை விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் அளவில் உள்ள பாஜக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வீடுவீடாக செல்ல சொல்லி ஓட்டுப் போடச் சொல்லி கேட்டுக்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
 
பாகஜ தலைவர் அமித்ஷா இதுபற்றி ஆர்.எஸ்.எஸ்ஸிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது கடந்த 2014 தேர்தலில் பாஜகவுக்கு 31 % ஓட்டுக்கள் கிடைத்ததாகவும் இதை வரும் தேர்தலில் 50 % ஆக  அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
 
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என அமிஷ் ஷா கூறியுள்ளதாகத் தெரிகிறது.
 
கடந்த 2014 தேர்தலில் 31%ஓட்டுக்களை பாஜக பெற்றிருந்தாலும் கூட 282 தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை: முன்னாள் முதல்வர் மகன் திடீர் பாதயாத்திரை..!

சீமானின் கடுமையான விமர்சனம்.. பதிலடி கொடுக்க திட்டம்.. நாளை தவெக அவசர ஆலோசனை..!

44 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தவர்.. பாஜகவில் இணைந்தவுடன் பதவி..!

கேரளாவில் ரயில் விபத்து.. 4 தமிழக தூய்மை பணியாளர்கள் பரிதாப மரணம்..!

இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments