Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் அப்ளிகேஷன் சேவையை துவங்கிய மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (00:53 IST)
உங்களோடு என்றும் தொடர்பில் இருக்கும் நோக்கத்தோடு 'M.K. Stalin’ மொபைல் அப்ளிகேஷன் சேவையை நான் துவங்குகிறேன் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உங்களோடு என்றும் தொடர்பில் இருக்கும் நோக்கத்தோடு 'M.K. Stalin’ மொபைல் அப்ளிகேஷன் சேவையை நான் துவங்குகிறேன். ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ், வின்டோவ் ஆகிய வசதிகளுடன் இருக்கும் மொபைல்கள் அனைத்திலும் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தலாம்.
 
இதன் மூலம் நீங்கள் என்னோடு தொடர்புகொள்ளாலாம். உங்கள் தொகுதியிலும், மாநில அளவிலும் உள்ள பிரச்சனைகள் குறித்து என் கவனத்துக்கு கொண்டுவரலாம். இது தவிர தமிழக வளர்ச்சிக்காக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
நீங்கள் இனிமேல் இந்த அப்ளிகேஷனில் வரும் அறிவிப்புகள் மூலம் என் உரைகள், அண்மைச் செய்திகள், கருத்துக்கள் மற்றும் என்னுடைய பத்திரிக்கை குறிப்புகள் போன்றவற்றையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
 
நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்படும் இந்த மொபைல் அப்ளிகேஷனில் நீங்கள் தன்னார்வலராக இணைந்து செயல்படுமாறு நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
எனது கொளத்தூர் தொகுதி மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கவும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை செலவு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கவும் இந்த மொபைல் அப்ளிகேஷனில் ஒரு பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது.
 
மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யும் கொளத்தூர் தொகுதி மக்கள் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
 
என்னோடு தொடர்பில் இருக்க இந்த மொபைல் அப்ளிகேஷனை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதிலுள்ள பல்வேறு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உங்களது கருத்தைக் கேட்க ஆர்வமாக காத்திருக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசியல் வரலாற்றில் மொபைல் அப்ளிகேஷனை சேவையை துவங்கிய பெருமை மு.க.ஸ்டாலின் பெறுகிறார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments