Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து...தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த சிறுமி ...

Webdunia
சனி, 16 மே 2020 (16:54 IST)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஒரு சிறுமி(17). அவர் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, அங்குள்ள ஒரு சுய உதவிக்குழு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடன் கொடுப்பது தொடர்பான பணியில் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருந்ததால், அவர், சரவணன், வேல்சாமி, குகன் உள்ளிட்ட நண்பர்கள் அறிமுகமாயினர்.

ஆனால், அந்தச் சிறுமி அவர்களிட தோழமையுடன் பழகி வந்த போதிலும், அவர்கள் தவறாக நினைத்துப் பழகியுள்ளனர்.

இந்த விசயம் சிறுமியின் அம்மாவுக்கு தெரிய வந்ததால் அவர்களிடம் பேச வேண்டாம் என சிறுமிக்குத் தடை போட்டார்.

இந்த நிலையில், அவர்கள் அந்தச் சிறுமியின் செல்போனுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை செய்துள்ளனர். மேலும் கடந்த வாரம் சிறுமிக்குத் தொடர்பு கொண்டு   வீட்டைவிட்டு வெளியேவருமாறும், இல்லாவிட்டால் தீ வைத்துக் கொளுத்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் சிறுமி பயந்துபோய் வீட்டுக்குள் தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்.  அப்போது சிறுமியின் அலறல் குரல் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 இளைஞர்களை போக்‌ஷோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments