Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது விவகாரம் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை கிடையாது : தமிழக அரசு அதிரடி

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (14:11 IST)
மேகதாது அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என கூறிவிட்டு அணை கட்ட ஒப்புதல் பெற்றதால் கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை என்பது அர்த்தமற்றதாகிவிட்டது என டெல்லிக்கு சென்ற தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.வி சண்முகம் கூறியுள்ளதாவது:
 
மேகதாதுவிவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு முதலில் கூறியிருந்தது. இந்நிலையில் தீடீரென  ஒப்புதல்பெற்றுவிட்டு அணைகட்ட ஏற்பாடு செய்து வருவது தமிழக அரசை வஞ்சிக்கும் செயலாகும். மேலும், மேகதாது விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் தனது அதிகாரத்தை மீறியுள்ளது.
 
மேகதாது அணைவிவகாரத்தில் இனிமேல் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை கிடையாது இவ்வாறு சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
 
தமிழக அரசுடன் பேச தயார் என்று கர்நாடக அரசு கூறியிருந்த நிலையில் தமிழக அமைச்சர் சண்முகம் இவ்வாறு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments