Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது- முதல்வர் முக. ஸ்டாலின்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (20:12 IST)
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் மு,.ஸ்டாலின் அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு  நேற்று  காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. .

இந்த நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று சமீபத்தில் தமிழ அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆள நர்.  ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து  முதல்வர் முக.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், ''அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. நாங்கள் சட்டப்படி இதை எதிர்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பற்றி திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளதாவது:

‘’ஒரு அமைச்சரை நீக்கவோ சேர்க்கவோ  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரால் தான் முடியும். ஆளுநர் எப்படி நீக்க முடியும்.  நாளை நீதிமன்றத்தில் ஆளுநர் குட்டு வாங்குவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments