Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுடன் மோசமாக நடந்து கொண்ட அரசு அதிகாரி கைது

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (21:54 IST)
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள  கடம்பூர் கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுஏற்பட்டதால்  சில நாட்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இருவரில்  மூத்த மகள் தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். 
இந்நிலையில் விஏஓ சரவணன் மது அருந்திவிட்டு போதையில் தனது மகளிடம் தவறாக நடந்ததாகத் தெரிகிறது.
 
இதுசம்பந்தமாக சரவணனின்  மனைவி கடந்த ஆண்டு நவம்பரில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவ்ல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். 
 
பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஏஓ சரவணனை வலைவீசித் தேடி வந்தார்கள்.
 
இந்நிலையில் சரவணன் வேறொரு பெண்ணைத் கல்யாணம் செய்திருக்கிறார்.  அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
.
இது பற்றிய தகவல் போலீஸாருக்குக் கிடைக்கவே அங்கு சென்றனர்.  அப்போது கையும் களவுமாக போலீசார் சரவணனை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments