Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் வாயைப் பொத்தி சீரழித்த கொடூரன் : திடுக்கிடும் தகவல்

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (13:53 IST)
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (45) .இவர் ரயிலில் பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவருகிறார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு 14வயது ஆகிறது. ஆனால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். 
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் வசிக்கும் ஷாயின் ஷா என்பவர் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளான். 
 
இதனையடுத்து கடும் வயிற்று வலியால் அந்த சிறுமி அவதியுற்றதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
 
பின்னர் இதுகுறித்து எம்.கே.நகர் போலீஸ் ஸ்டேசனில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதையடுத்து போக்ஸோ சட்டத்தில் ஷாயின் ஷா வை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
தற்போது சிறுமி சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்