Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (18:00 IST)
மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தொடர்ந்து முடி கொட்டியதால் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் மிதுன்(27). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மிதுனுக்கு நீண்ட நாட்களாக முடி கொட்டும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மிதுனுக்கு அவரது தாயார் பெண் பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து முடி கொட்டும் பிரச்சனையால் தவித்து வந்த மிதுன் விடுமுறை எடுத்து கொண்டு மதுரைக்கு வந்து விட்டார். 
 
இந்நிலையில் நேற்று மிதுனின் தாயார் கோவிலுக்கு சென்ற நேரத்தில், மிதுன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய தாயார் மிதுன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மிதுனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முடி கொட்டிய சிறிய பிரச்சனைக்காக ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments