அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (08:52 IST)
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



கடந்த மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ஆளும் கட்சி அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

மோந்தா புயல்: சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவுக்கான மழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படும்: தேர்தல் ஆணையம்..!

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments