Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Prasanth K
ஞாயிறு, 27 ஜூலை 2025 (10:12 IST)

தேர்தல் ஆணையத்தை பாஜக கண்ட்ரோல் செய்வதாகவும், காங்கிரஸ் தோல்விகளுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ”காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுடன் என்றும் உடன் நிற்கும். தேர்தலை முன்னிட்டு மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடுங்கள்.தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்போது மாவட்ட கட்சி நிர்வாகிகள் கருத்துகளும் நிச்சயமாக கேட்போம்.

 

கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆனால் உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகம் வரும். ஆனால் அம்பயரின் ஒருசார்பான செயல்பாடு உங்கள் தோல்விக்கு காரணமானதை நீங்கள் அறியலாம். அதுபோல இந்திய தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. அதனால்தான் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது. தேர்தல் ஆணையம் ஆர்.எஸ்.எஸ், பாஜகவால் கட்டுப்படுத்தப்படுகிறது.

 

இந்த நாடு ஒரு கோவில் என்றால் அதில் எல்லாரும் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் யாருக்கு பிரசாதம் கிடைக்க வேண்டும் என்பதை பாஜக, ஆர் எஸ் எஸ் கட்டுப்படுத்துகிறது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments