Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெல்மெட் அணிந்து பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்

ஹெல்மெட் அணிந்து பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்
, திங்கள், 11 ஜூலை 2016 (13:12 IST)
கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால், ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்தை பாதுகாப்பாக ஓட்டிச் சென்றார்.


 


கர்நாடக: பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தமிழ்நாடு அரசுப் பேருந்தை பொன்வேல் (50)  என்பவர் ஓட்டிச் சென்றார். நடத்துநர் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனர். இந்நிலையில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் நேற்று பகல் 12 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதில், ஓட்டுநர் பொன்வேலுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திய பொன்வேலு, சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்தை இயக்கினார். அப்போது, முன்பக்க கண்ணாடி இல்லாததால், மண், தூசி ஆகியவை பறந்து வந்து ஓட்டுநரின் கண்களில் விழுந்தன. அவர் மிகுந்த சிரமத்துடன் பேருந்தை ஓட்டுவதை பார்த்த பயணி ஒருவர், தான் வைத்திருந்த ஹெல்மெட்டை அணிந்து பேருந்தை ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்டார். இதை அடுத்து ஓட்டுநர் பொன்வேல் ஹெல்மெட் அணிந்துகொண்டு பேருந்தை கிருஷ்ணகிரிக்கு ஓட்டிச் சென்றார். எதிரில் வந்தவர்கள் அவரை காட்சிப் பொருள் போன்று வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

71 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த அதிமுக எம்பி!