Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (14:13 IST)
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறை சார்பில் இன்று சென்னை சைதாப்பேட்டையில், எம்.சி.ராஜா கல்லூரி ஆண்கள் விடுதி வளாகத்தில்  ரூ. 44.50 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள நவீன வசதிகளைக் கொண்ட கட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம்!

கல்வியைத் தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க 'திராவிடர் இல்லம்' நிறுவினார் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசனார்.

கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவுப் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி.ராஜா அவர்கள்.

அவரது பெயரில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் பயில, 1961-இல் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர்.

அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன்.

மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து! கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

எடப்பாடி தரப்பில் இருந்து பரப்பப்பட்ட வதந்தி? விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments