மின்சார தாக்குதலில் இருந்து பசுக்களை காப்பாற்றிய நாய் !

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (16:28 IST)
சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே சாலையோரம் ஒரு மூதாட்டி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 60.

மூதாட்டி தினம் தோறும் அதே பகுதிக்கு மாடுகளை அழைத்து மேய்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில்  காற்றுடன் மழை பெய்தது. இதில் அங்கிருந்த மின்சார ஒயர் அறுந்து வேலியின் மீது விழுந்தது.

அப்போது அங்கிருந்த 2 சினைமாடுகள் வேலி அருகில் சென்றால் அவைகள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

அதைப் பார்த்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி மாடுகள் அருகே சென்றபோது அவருக்கும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் உயிரிழந்தார்.

பின்னர் அவருடன் மாடு மேய்க்க சென்ற பெண் தூக்கி வீசப்பட்டார். ஆனால் உயிர் பிழைத்தார். இதையடுத்து  இறந்தவர் மீது  மூதாட்டி வளர்த்த நாய் தன் பாசத்தை காண்பித்தது இதற்குன் முன் மூதாட்டி மின்சாரம் தாக்கியபோது மற்ற பசுமாடுகளை வேலை பக்கம் வரவிடாமல் நாய் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments