Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதி பங்கீடு முடிவானது....

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (20:31 IST)
திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர். தற்பொழுது தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கிண்டி தனியார் ஓட்டலில் இருந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ்.அழகிரி, முகுல்வாஸிக், வேணூகோபால், திருநாவுக்கரசர் ஆகியோர் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளனர்.
 
அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் , வசந்தகுமார். தங்கபாலு உள்ளிட்டோரும் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் திமுக  - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பற்றிய செய்திகள் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இதுபற்றிய  விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில் தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் 1 இடம் என மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்படுள்ளதாக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வேணுகோபால் கூறியதாவது: நாடு முழுவதுமே பாஜக அரசுக்கு எதிர்ப்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்று தெரிவித்தார்.
 
தி.மு.க.தலைவர்  ஸ்டாலின் கூறியதாவது: 
 
அதிமுக அமைத்துள்ளது பண நலன் கூட்டணி என்று மக்களே கூறுகிறார்கள். 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வந்தால் அது பற்றி பேசுவோம்.கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும். மேலும் கூட்டணிக்கு எங்களுக்குக் தோள் கொடுத்த தோழமை கட்சிகளை அழைப்போம். தேமுதிகவுடன் எதுவும் பேசவில்லை. நாங்கள் ஓட்டலில் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தாமல் வெளிபபடையாக எங்கள் கட்சி தலைமையகத்தில் வைத்துக் கூட்டணி பற்றி அறிவித்துள்ளோம். எந்த தொகுதிகள் என்பது கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்து அறிவிக்கப்படும் இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments