மார்ச் 8ல் நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு: சீருடை பணியாளர் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (16:49 IST)
தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 8ஆம் தேதி உடற்தகுதி தேர்வு 41 மையங்களில் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது 
 
ஏப்ரல் 2ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு துறை வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்றும் அன்றே உடற்தகுதி தேர்வும் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
முன்னதாக தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 11,741 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வுகள் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments