Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (20:25 IST)
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

அந்த வகையில்  இந்தியா ஹாக்கி, கிரிக்கெட், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பாக விளையாடி  இதுவரை இல்லாத அளவாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 1 07 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ் நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.

இதில், வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஊக்கத்தொகை வழங்குகிறார். தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 20 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments