Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் கல்லைப் போட்டு ஓட்டுநர் கொடூர கொலை...

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (14:19 IST)
ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஒரு தனியார் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து பொருட்களை லாரியில் ஏற்றிச்செல்வதற்காக நேற்று முந்தினம் சென்னையில் இருந்து மன்னார் குடியைச் சேர்ந்த பாலசுந்தரம் (25) மற்றும் திண்டிவனம் பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (35) ஆகிய இருவரும் தனித்தனியாக லாரிகளில் வந்தனர்.
இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தை லாரி டிரைவராக வேலை செய்துவந்தனர். இந்நிலையில் பொருட்களை எடுக்கவந்த போது, பாலசுந்தரத்திற்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்கள் மோதலில் ஈடுப்பட்டதாகத் தெரிகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து, அன்று இரவு பாலுசுந்தரம் லாரிக்கு அருகில் தூங்கிவிட்டனர். பின்னர் அப்போது குடிபோதையில் இருந்த கோபாலகிருஷ்ணன்  அருகில் இருந்த இரும்புக்கம்பியால் பாலசுந்தரத்தின் தலையில் அடித்தார்.ஆனாலும் ஆத்திரம் அடங்காத கோபாலகிருஷ்ணன் ஒரு கல்லை எடுத்து பாலசுந்தரத்தின் தலையில் போட்டார். இதில் பாலசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  இறந்தார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், பாலசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான கோபாலகிருஷணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments