Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக முன்னாள் அமைச்சர் காரில் செல் போன் மற்றும் ரூ 60 ஆயிரம் அபேஸ்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (01:24 IST)
வேலூரில், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு காரில் வைத்திருந்த 6 செல்போன்கள் மற்றும் பணம் ரூ. 60 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள,  திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது காரில் சென்றார்.
 
தங்கம் தென்னரசு தனது காரிலிருந்து இறங்கி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மீண்டும் தனது காரில் வந்து அமர்ந்தார். அப்போது,  காரில் வைக்கப்பட்டிருந்த 6 செல்போன்கள், ரூ. 60,000 பணம், ஏடிஎம் கார்டு மற்றும் எம்.எல்.ஏ. அடையாள அட்டை ஆகியவை திருடு போனது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
 
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, தங்கம் தென்னரசுவின் கார் டிரைவர் சேகர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், முன்னாள் அமைச்சரிடமே ஆட்டைப்போட்டநபரை வலை வீசி தேடி வருகின்றனர். 
 

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments