Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக காணாமல் போகும்; திமுக தோற்று போகும்... தங்க தமிழ்செல்வன் ஸ்கெட்ச்!

Webdunia
திங்கள், 6 மே 2019 (09:03 IST)
அமமுகவில் முக்கிய பங்குள்ள தங்க தமிழ்செல்வன் தேர்தலுக்கு பின்னர் அதிமுக என்னும் ஒன்று காணாமல் போகும் என தெரிவித்துள்ளார். 
 
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் பேசியது பின்வருமாறு, திமுக, அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் பின்வாங்குகிறார்கள். தமிழக மக்கள் புதிய தலைமையை எதிர்பார்க்கிறார்கள்.
காவி வேட்டியை கட்டிகொண்டு மோடி சாமியை வணங்க ஓபிஎஸ் குடும்பத்துடன் வாரணாசி சென்றார். இவரால் தமிழகத்தின் மானம் வடமாநில காற்றில் பறக்கிறது. ஆளுநர் பதவியை பெற்று கொண்டு அரசியல் வாழ்வை முடித்துகொள்ளலாம் என ஓபிஎஸ் நினைக்கிறார்.
 
ஓபிஎஸ் செய்த துரோகங்களைதான் நான் எடுத்துக் கூறுகிறேன். அதிமுகவை நாங்கள் பிரிக்கவில்லை. நாங்கள் உண்மையான அதிமுகவினர். தேர்தல் முடிவிற்கு பின் அதிமுக காணாமல் போகும். அமமுகதான் அதிமுக என மாறும். 
அதிமுகவினர் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என ஸ்டாலின் பேசுவது தவறானது. அவர்கள் அமமுகவிற்குதான் வாக்களிப்பார்கள். திமுகவின் பிரச்சாரம் என்பது எங்கள் மீதான அச்சத்தின் வெளிப்பாடு. ஓட்டை பிரிக்கும் கட்சி அமமுக அல்ல. அமமுக அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments