Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் – தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (13:48 IST)
தங்கள் கட்சியின் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து திமுக வோடு சேர்ந்து இந்த ஆட்சியைக் கலைப்போம் என அமமுகவின் முக்கியத் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமமுக அலுவலகத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர் செல்வத்தைக் காண தேனி சிறைக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் அதிமுக ஆட்சியைக் கலைப்போம் எனக் கூறியுள்ளார்.

அதிமுக வின் பி டீம் என அமமுக வை அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி வருகிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தமிழ்ச்செல்வன் ‘ பி டீமாக இருந்தால் நாங்கள் ஏன் தனியாக தேர்தலில் நிற்க வேண்டும். கூட்டணி அமைத்து நின்றிருக்கலாமே. நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர 35 எம்.எல்.ஏக்கள் தேவை. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments