Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர்?: சுவாதி கொலை வழக்கில் புதிய பரபரப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (08:27 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர் தான் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் புகார் அளித்துள்ளார்.


 
 
ராம்குமாரை காவல்துறை கைது செய்ய முயன்றபோது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமார் கழுத்தை அறுக்கவில்லை காவல்துறையுடன் வந்தவர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தார்கள் என ராம்குமாரின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் குற்றாம் சாட்டினர்.
 
இதனையடுத்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் தனது மகன் ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர்தான் என பரபரப்பு புகார் ஒன்றை செங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
 
அவரது புகாரில், எனது மகன் கைது செய்யப்பட்டபோது எனது வீட்டிற்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் உனது மகன் பின்புறத்தில் கழுத்தை அறுத்து கொண்டு கிடக்கிறான் என்று கூறினார்கள். நாங்கள் சென்று பார்த்தபோது ராம்குமார் கழுத்து அறுபட்டு கிடந்தான் அவன் அருகில் நின்றிருந்த ஒரு காவலர் கையில் ரத்தம் படிந்திருந்தது.
 
மேலும் தனது மகன் ராம்குமாரை கொலை செய்ய முயற்சி செய்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் மீதும், அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காளியம்மாளை தொடர்ந்து மற்றொரு முக்கியப்புள்ளி விலகல்! - காணாமல் போகும் நாம் தமிழர் கட்சி?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

முதல்வரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை.. தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..

எலான் மஸ்க் இமெயிலை கண்டுக்காதீங்க.. ட்ரம்ப் அடித்த பல்டியால் குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!

வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க கொடி! அகற்றிய வனத்துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments