Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெண்டர் ஒதுக்கியதில் அதிமுக அணிகளுக்கு இடையே பிரச்சனை: இணைப்பு நடந்த மாதிரி தான்!

டெண்டர் ஒதுக்கியதில் அதிமுக அணிகளுக்கு இடையே பிரச்சனை: இணைப்பு நடந்த மாதிரி தான்!

Webdunia
சனி, 27 மே 2017 (10:11 IST)
அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என இரு அணியினரும் கூறி வருகின்றனர். ஆனால் இணைப்பு நடந்த மாதிரி இல்லை. பல்வேறு காரணங்கள், கோரிக்கைகளால் இணைப்பு பேச்சுவார்த்தை நடக்காமலே உள்ளது.


 
 
இந்நிலையில் டெண்டர் ஒன்று ஒதுக்கியதில் சசிகலா அணியை சேர்ந்தவர்கள் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி ஆதரவாளரை ஈபிஎஸ் அணியினர் புறக்கணித்தது இணைப்பு பேச்சுவார்த்தையை இன்னும் தூரமாக்கியுள்ளது. இதற்கு காரணம் தம்பிதுரையின் வேலைகள் எனவும் கூறப்படுகிறது.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் தாய் திட்டத்துக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் டெண்டர் ஆன் லைனில் நடைபெற்றது. இதற்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமியின் ஆதரவாளர் டெண்டர் கோரியிருந்தார்.
 
ஆனால் கடந்த 25-ஆம் தேதி கே.பி.முனுசாமியின் ஆதரவாளர்களின் டெண்டர்களை நீக்கிவிட்டு, சசிகலா அணியினருக்கு 60% வேலையும், திமுகவினருக்கு 30% வேலையும், கட்சியில்லாத ஒப்பந்தக்காரர்களுக்கு 10% வேலையும் பிரித்துக்கொண்டார்கள்.
 
தம்பிதுரையின் வேலையால் தான் இந்த டெண்டர் கிடைக்கவில்லை என கொந்தளித்த கே.பி.முனுசாமி இந்த நிலமையில் இணைப்பு பேச்சுவார்த்தை எங்கே நடக்கப்போகிறது என கூறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments