சான்றிதழுடன் வந்தால் உடனே வேலை. பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க அதிரடி

Webdunia
திங்கள், 15 மே 2017 (04:03 IST)
போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநர் , நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.



 


ஓட்டுநர் , நடத்துநர் உரிமை பெற்றவர்கள் அசல் சான்றிதழ் உடன் வந்தால் தகுதி அடிப்படையில் உடனடியாக தற்காலிக பணி வழங்கப்படும் என்றும், வேலை இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு உடனடியாக கிளை மேலாளரை அணுகலாம் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தங்குதடையின்றி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!

பெண்களிடம் தவறாக நடப்பது புனித பயணத்திற்கு சமம்.. சர்ச்சை பேச்சு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

இண்டர்நெட் கூட இல்லை.. உயிருக்கு பயந்து வந்துட்டோம்.. ஈரானில் இருந்த வந்த இந்தியர்கள் பேட்டி..

தவெகவில் இணைந்த அதிமுக பிரபலம்.. இன்னும் யாரெல்லாம் வருவார்கள்?

எம்ஜிஆர் பிறந்த நாளில் விஜய் போட்ட எக்ஸ் பதிவு.. அதிமுக வாக்குகளை கவர திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments