Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காபி நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கும் கணவருக்கும் விரிசல்?

காபி நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு கணவருடன் விரிசல்

காபி நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கும் கணவருக்கும் விரிசல்?
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (16:04 IST)
தனியார் தொலைக்காட்சியில் காபி நிகழ்ச்சி நடத்தும் தொகுப்பாளினுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தனியார் தொலைக்காட்சியின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினி, தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று துடிப்பாய் இருக்கிறாராம்.
 
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனக்கு தெரிந்தவர்களிடம் சினிமா இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு வாங்கித் தரும்படி, தொகுப்பாளினியை அவர் நச்சரித்து வருகிறார் என்றும், ஆனால், அதில் விருப்பம் இல்லாத தொகுப்பாளினி “நான் யாரிடம் சிபாரிசு கேட்க மாட்டேன். நீங்களே வாய்ப்பு தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாராம்.
 
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்து, கடந்த 3 மாதங்களாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.  விரைவில் அவர்கள் விவாகரத்து வரை போக வாய்ப்பிருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
 
சினிமா துறையில் மட்டுமல்ல, தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் வாழ்க்கையிலும் விவாகரத்து தற்போது சகஜமான ஒன்றாக மாறிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக வேட்பாளரை மாற்றினாரா தம்பிதுரை? : கரூரில் பரபரப்பு