உண்ணாவிரத போராட்டம் நடத்திய 79 ஆசிரியர்கள் மயக்கம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (12:49 IST)
உண்ணாவிரத போராட்டம் நடத்திய 79 ஆசிரியர்கள் மயக்கம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு!
உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் 79 பேர் மயக்கம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த இருபத்தி ஏழாம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதை அடுத்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. 
 
இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்களில் திடீரென 79 பேர் மயக்கம் அடைந்ததாகவும் அவர்களில் 10 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து கொலை செய்து உடலை துண்டாக்கிய 3 பேர் கைது..!

கணவருக்கு கிட்னி கொடுத்து உயிரை காப்பாற்றிய மனைவி.. வாழும் பார்வதி தேவி என புகழ்ந்த கணவர்..!

காசா ஆதரவு பேரணி: பாகிஸ்தானில் பெரும் பதற்றம்; இணைய சேவை முடக்கம்

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு இல்லை.. பரிசை தட்டி சென்ற வெனின்சுலா பெண்..

அடுத்த கட்டுரையில்
Show comments