Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலம் அள்ள சொல்லி ஒடுக்கப்பட்ட மாணவனை துன்புறுத்திய ஆசிரியை – 5 ஆண்டு சிறை !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:37 IST)
நாமக்கல்லில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தலித் மாணவனை மலம் அள்ள சொன்ன நடுநிலைப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி. இவர் ராமபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.  இவர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர் ஒருவரை மலம் அள்ள சொல்லி வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடந்த இந்த வழக்கில் நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது.விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments